சோனியா தலைவராக தொடர வேண்டும்! – வலியுறுத்திய மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள்

சோனியா தலைவராக தொடர வேண்டும்! – வலியுறுத்திய மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள்

காங்கிரஸ் கமிட்டி தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வற்புறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சோனியா தலைவராக தொடர வேண்டும்! – வலியுறுத்திய மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள்

காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி காரணமாக பதவி விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். தன்னால் இடைக்காலத் தலைவராக தொடர முடியாது என்று சோனியா காந்தி அறிவிக்கவே, காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் ஆன்லைனில் இன்று நடந்து வருகிறது.

சோனியா தலைவராக தொடர வேண்டும்! – வலியுறுத்திய மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள்

இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக தொடர தனக்கு விருப்பமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். மேலும், “கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான விவாதத்தைத் தொடங்கும்படி” அவர் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சோனியா தலைவராக தொடர வேண்டும்! – வலியுறுத்திய மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள்

இருப்பினும் மற்ற தலைவர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட தலைவர்கள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.