திண்டுக்கல் சிறுமி பாலியில் வன்கொடுமை; அரசு மேல்முறையீடு செய்யும்- அமைச்சர் சிவி சண்முகம்

 

திண்டுக்கல் சிறுமி பாலியில் வன்கொடுமை; அரசு மேல்முறையீடு செய்யும்- அமைச்சர் சிவி சண்முகம்

திண்டுக்கல் சிறுமி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக பெண்கள் மட்டும் இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாமில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பாசறை சார்பாக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், “எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அடுத்த முதல்வர் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கான எந்த தகுதியும் அவர் வளர்த்துக் கொள்ளவில்லை. 2013ம் ஆண்டு முதலே மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் பெண்கள் மீது இழைக்கப்படும் குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 32 பெண் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் எதனையும் தெரியாமல் எதிர்க்கட்சித்தலைவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திறக்கப்போம் என்று பேசுவது அவருக்கு எந்த தகுதியும் இல்லை, நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்பதை காட்டுகிறது. திண்டுக்கல் சிறுமி பாலியில் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும்” என்று தெரிவித்தார்.