14 நாட்களுக்கு… கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு!

 

14 நாட்களுக்கு… கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோன வைரஸ் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் தான் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

14 நாட்களுக்கு… கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு!

பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே நேரத்தில், கொரனோ என்னும் அரக்கனின் பிடியில் இருந்து மக்களை காப்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு, வார இறுதியில் ஊரடங்கு என பல்வேறு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

14 நாட்களுக்கு… கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு!

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு பொது முழக்கமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், பாதிப்பு குறையாததால் ஆந்திர அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.