ஊரடங்கால் இரண்டு மடங்கு லாபம் பார்த்த டாஸ்மாக் கடைகள் : சரக்குகள் 5 மணியுடன் தீர்ந்ததால் குடிமகன்கள் ஏமாற்றம்!

ஊரடங்கால் இரண்டு மடங்கு லாபம் பார்த்த டாஸ்மாக் கடைகள் : சரக்குகள்  5 மணியுடன் தீர்ந்ததால் குடிமகன்கள் ஏமாற்றம்!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,017ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் நேற்று ஒரேநாளில் 842பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கால் இரண்டு மடங்கு லாபம் பார்த்த டாஸ்மாக் கடைகள் : சரக்குகள்  5 மணியுடன் தீர்ந்ததால் குடிமகன்கள் ஏமாற்றம்!

குறிப்பாக சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ஊரடங்கால் இரண்டு மடங்கு லாபம் பார்த்த டாஸ்மாக் கடைகள் : சரக்குகள்  5 மணியுடன் தீர்ந்ததால் குடிமகன்கள் ஏமாற்றம்!

பொது முடக்கம் அமலில் வந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்குள்ள 300 கடைகளில் கடந்த வாரம் விற்பனை 18 கோடியாக இருந்த நிலையில் நேற்றைய விற்பனை 36 கோடியாக உயர்ந்துள்ளது. சில கடைகளில் நேற்று மாலையே சரக்குகள் அனைத்தும் விற்கப்பட்டதால் 5 மணியுடன் கடை மூடப்பட்ட டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.