தேனி மாவட்டம் கம்பத்திலும் ஊரடங்கு… கடைகள் திறக்கத் தடை!

 

தேனி மாவட்டம் கம்பத்திலும் ஊரடங்கு… கடைகள் திறக்கத் தடை!

தேனி மாவட்டத்தில் கம்பம் நகரத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை, தேனி மாவட்டத்திலும் கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும் மொத்தமாக தளர்வு அளிக்கப்பட்டது. இதனால், நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் மதுரை, தேனி மாவட்டங்கள் திணறப்போயின.

தேனி மாவட்டம் கம்பத்திலும் ஊரடங்கு… கடைகள் திறக்கத் தடை!கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மொத்தமாக முடிவெடுத்த நிலை மாறி, தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதி நகரம், தாலுகா அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேனி நகரம் என்று ஒவ்வொருவராக ஊரடங்கை அறிவித்து வருகின்றனர். கடைசியில் கம்பத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்திலும் ஊரடங்கு… கடைகள் திறக்கத் தடை!
ஜூலை 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களாக காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது மக்கள் வெளியே வருவதை தடுக்க மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே சுற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி, போடி, தேனி, கடைசியில் கம்பம் என்று தனித்தனியாக அறிவிக்காமல் மொத்தமாக அறிவித்துவிட வேண்டியதுதானே என்று பொது மக்கள் கூறுகின்றனர். மொத்தமாக அறிவித்தால் சலுகைகள் அறிவிக்க வேண்டியிருக்கும் என்பதால் இப்படி துண்டுதுண்டாக ஊரடங்கு அறிவிக்கப்படுகிறதா என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.