2 வாரங்களுக்கு ஊரடங்கு… 10 ஆயிரம் போலீசார் குவிப்பு!

 

2 வாரங்களுக்கு ஊரடங்கு… 10 ஆயிரம் போலீசார் குவிப்பு!

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2 வாரங்களுக்கு ஊரடங்கு… 10 ஆயிரம் போலீசார் குவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தனியார், அரசு பேருந்துகள், வாடகை டாக்ஸி, ஆட்டோ போன்ற போன்றவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மளிகை கடைகள், காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்கு ஊரடங்கு… 10 ஆயிரம் போலீசார் குவிப்பு!

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளது. 200 இடங்களில் சட்டம் ,ஒழுங்கு காவல் துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகன தணிக்கை சோதனை நடைபெற்று வருகிறது. அத்துடன் 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். அத்துடன் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.