ஊரடங்கு நீட்டிப்பு? நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 

ஊரடங்கு நீட்டிப்பு? நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு நீட்டிப்பு? நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதியுடன் முடிகிறது. தற்போது நோய்த்தொற்றின் தீவிரத் தன்மையை பொறுத்து மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.