ஊரடங்கு நீட்டிப்பு ; ஓகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

 

ஊரடங்கு நீட்டிப்பு ; ஓகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் ஒரே இடங்களில் கூடக் கூடாது என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், தமிழகத்தில் நடைபெறும் பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு நீட்டிப்பு ; ஓகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

இந்த நிலையில் ஓகேனக்கலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆண்டு தோறும் விமர்சையாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் ரத்து செய்யப்படுவதாகவும் கொரோனாவை தடுப்பு நடவைக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.