சீரகம் விளைந்த சீமை – ஆண்டிப்பட்டியை சீரழித்த அதிகாரிகள்!

 

சீரகம் விளைந்த சீமை – ஆண்டிப்பட்டியை சீரழித்த அதிகாரிகள்!

ஒரு காலத்தில், அதிகாரத்திலும் தொழிலிலும் செல்வாக்கு செலுத்திய மனிதர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போவது தவிர்க்க முடியாது. அதுபோன்ற நிலையில் உள்ளது தென் தமிழகத்தில் செல்வாக்கு செலுத்திய ஒரு ஊர். அந்த ஊர், தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி.

ஆண்டிப்பட்டி தொகுதி இயற்கையாகவே செல்வ செழிப்புமிக்க பகுதி. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர். சுற்றிலும் மலை, வற்றாத மலை ஆறுகள் என மக்களை வாழவைக்கும் ஏராளமான இயற்கை வளங்கள் கொண்ட செழுமையான பகுதி.

சீரகம் விளைந்த சீமை – ஆண்டிப்பட்டியை சீரழித்த அதிகாரிகள்!

வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகள் அடர் காடுகளாக இருந்தன. அதன் காரணமாக ஆண்டுதோறும் இங்கு மழைபொழிவு அதிகமாக இருக்கும். மேற்கு மலைத் தொடர்ச்சி ஒட்டியுள்ள வேலப்பர் கோவில் மலைப்பகுதி, பாலக்கோம்பை மலைப்பகுதிகளும் அடர் வனங்களாகும். அதன் காரணமாக இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் விவசாய வேலைகளில் மும்முறமாக இருப்பார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, சித்தார்பட்டி, ஜி. உசிலம்பட்டி, கொத்தம்பட்டி. மரிக்குண்டு , மொட்டனுது. ராஜதானி, தெப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் சீரகம் விவசாயம் செய்து வந்துள்ளனர். சீரகப் பயிருக்கு தண்ணீர் அதிகம் தேவை என்பதால், அப்போதெல்லாம் விவசாயிகள் சீரக விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். சீரகம் விவசாயம் என்பது ஆறு மாத காலமாகும். தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கும் சித்திரை மாதத்தில், ஆண்டிப்பட்டி தொகுதியில் நல்ல சீதோஷ்ண நிலை இருக்கும். இதனால் அப்போதுதான் சீரகபயிருக்கு விவசாயிகள் விதை பாவு செய்வார்களாம்.

சீரகம் விளைந்த சீமை – ஆண்டிப்பட்டியை சீரழித்த அதிகாரிகள்!

சீரகம் விளைந்த பூமிக்கு, பின்னாட்களில் அதிகாரிகள் சரிவர திட்டங்களை சேர்க்கவில்லை என்பதால் அப்படியே நிலைமை தலைகீழானது. இப்போது விவசாயிகள் சீரகம் பயிருடுவதையே விட்டுவிட்டனர். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு பல நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்களாம். எனவே சீரகம் விளைந்த சீமையான ஆண்டிப்பட்டியை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலையில் மாற்றம் உருவானால், அது ஆட்சிக்கு அதிருப்தி கொண்டுவந்து சேர்க்கும் என்பது புரிந்து கொண்டால் நல்லது!