கடலூர், நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 

கடலூர், நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்றும் இதற்கு புரெவி என்று பெயரிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலால் டெல்டா மற்றும் வட தமிழகத்தில் டிச. 2 முதல் 4ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கடலூர், நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ஏற்கனவே நிவர் புயல் கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது மற்றொரு புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக கடலூர், நாகை, காரைக்கால், எண்ணூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.