லடாக் உயிரிழப்பு – பி.எம் கேர்ஸை தொடர்புபடுத்தி பதிவிட்ட சிஎஸ்கே மருத்துவர் சஸ்பெண்ட்!

 

லடாக் உயிரிழப்பு – பி.எம் கேர்ஸை தொடர்புபடுத்தி பதிவிட்ட சிஎஸ்கே மருத்துவர் சஸ்பெண்ட்!

லடாக் சீன எல்லையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களையும் பிஎம் கேர்ஸ் நிதியையும் தொடர்புபடுத்தி ட்விட்டரில் பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

லடாக் உயிரிழப்பு – பி.எம் கேர்ஸை தொடர்புபடுத்தி பதிவிட்ட சிஎஸ்கே மருத்துவர் சஸ்பெண்ட்!லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சீனா நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா மீது உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும் என்ற கோபம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் மது தொட்டப்பளில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இறந்தவர்களின் சவப்பெட்டியின் மீது பிஎம் கேர்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படுமா என்று அறிய ஆவலாக உள்ளேன்” என்று கூறியிருந்தார். பிரச்னை பெரிதாகவே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.

http://


இந்த நிலையில் சி.எஸ்.கே நிர்வாகம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டாக்டர் மது தொட்டப்பிளிலின் தனிப்பட்ட ட்வீட் தொடர்பாக சி.எஸ்.கே நிர்வாகத்துக்கு எதுவும் தெரியாது. டீம் மருத்துவர் என்ற பொறுப்பிலிருந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிர்வாகத்துக்குத் தெரியாமல் வெளியான அந்த பதிவுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளது.