மொறுமொறு ஆப்பிள் பஜ்ஜி… சுவையோ சுவை!

 

மொறுமொறு ஆப்பிள் பஜ்ஜி… சுவையோ சுவை!

பழங்கள்… எளிதில் செரிமானமாகும் உணவுகளில் ஒன்று. அந்தவகையில், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான 14 சதவிகித அத்தியாவசிய வைட்டமின்களை தரக்கூடியது ஆப்பிள். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடமே செல்ல வேண்டிய அவசியமிருக்காது. என்று கூறுகிறது இயற்கை மருத்துவம்.

மொறுமொறு ஆப்பிள் பஜ்ஜி… சுவையோ சுவை!
பஜ்ஜி
ஆப்பிளில் வைட்டமின்கள்,புரோட்டின்கள் நிறைந்துள்ளன. இவை நம் சருமத்தை அழகாக்க வைத்து கொள்ள பெரிதும் உதவும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடலாம். ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள கெட்டகொலஸ்ட்ராலை நீக்கும். ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட், மூளை செல்கள் அழியாமல் பாதுகாப்பதுடன் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கும். இந்த க்யூயர்சிடின் உடலில் ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் செல்களின் வலிமையை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான ரத்த ஓட்டத்தை வழங்கும். புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும் அழிக்கிறது. சத்துகள் நிறைந்திருப்பதுடன் நோய்களை நீக்கும் ஆப்பிளை தினமும் சாப்பிடுவது என்றால் போரடிக்கத்தான் செய்யும். ஆகவே, கொஞ்சம் மாறுதலாக சுவையான பஜ்ஜி செய்து சாப்பிடலாம். அதுபற்றி சொல்கிறார் சமையல்கலை நிபுணர் பிரியா ராஜா.

மொறுமொறு ஆப்பிள் பஜ்ஜி… சுவையோ சுவை!
மொறுமொறுப்பான ஆப்பிள் பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள் மற்றும் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஆப்பிள் – மூன்று கப்
எண்ணெய் – (வறுப்பதற்கு)தேவையான அளவு
பஜ்ஜி மாவு – ஒன்றரை கப்
பனைவெல்லம் – தேவையான அளவு
சமையல் சோடா – ஒரு கப்
பால், லவங்கப்பட்டை, உப்பு – தேவையான அளவு
முட்டை – இரண்டு

மொறுமொறு ஆப்பிள் பஜ்ஜி… சுவையோ சுவை!

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு, பனைவெல்லம் (வெல்லப்பாகு), சமையல் சோடா, உப்பு, பால், முட்டை சேர்த்து நன்கு கரைத்து அதனுள் ஆப்பிளைச் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின்பு அந்த மாவுடன் கலந்த ஆப்பிளை எடுத்து பொன்னிறமாகும் அளவு 5 நிமிடம் வறுத்தெடுக்க வேண்டும். பிறகு அதன் மேல் தேன் சேர்த்தால் சூடான ருசியான ஆப்பிள் பஜ்ஜி தயார்.
.