“கிராம விழிப்புணர்வு காவலர்களால், குற்ற வழக்குகள் குறையும்”-திருவள்ளூர் எஸ்.பி. பேட்டி

 

“கிராம விழிப்புணர்வு காவலர்களால், குற்ற வழக்குகள் குறையும்”-திருவள்ளூர் எஸ்.பி. பேட்டி

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை பெருமளவில் குறைக்க கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பு உதவும் என்று காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம விழிப்புணர்வு காலர் திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டு காவலர்களிடம், இன்று எஸ்.பி. அரவிந்தன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராம விழிப்புணர்வு காவலர் அமைப்பு மூலம் கிராமப் புறங்களில் நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளையும் நேரடியாக பேசி தீர்த்துவைக்க முடியும் என்று கூறினார்.

“கிராம விழிப்புணர்வு காவலர்களால், குற்ற வழக்குகள் குறையும்”-திருவள்ளூர் எஸ்.பி. பேட்டி

குற்ற வழக்குகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தற்கொலை போன்ற சம்பவங்களை பெருமளவில் குறைக்க காவலர்கள் முன்னெடுத்து செல்வார்கள் என்றும் கூறினார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க கிராம அளவில் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அதில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி தலைவர், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோரை இணைத்து, பிரச்சினைகள் குறித்து பதிவிட செய்வர் என்றும் கூறினார். இந்த திட்டத்தின் முலம், பொதுமக்களின் பிரச்சினைகள் காவல் நிலையங்களுக்கு வராதபடி தீர்த்து வைக்க முடியும் என்றும் அரவிந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.