“கஞ்சா அடிக்காம  உடம்பெல்லாம் உதறுதே “டாக்டர் கெட்டப்பில் போதை பொருளை தேடியலைந்த வாலிபர்கள் . . 

“கஞ்சா அடிக்காம  உடம்பெல்லாம் உதறுதே “டாக்டர் கெட்டப்பில் போதை பொருளை தேடியலைந்த வாலிபர்கள் . . 

லக்னோவில் இரண்டு இளைஞர்கள் டாக்டரின் கவசங்களை அணிந்துக்கொண்டு ஹெராயின் போதைப்பொருளைத் தேடி, தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த 11 கிராம் போதை பொருளை  போலீசார் மீட்டனர்.

லக்னோவில் இரண்டு இளைஞர்கள் டாக்டரின் கவசங்களை அணிந்துக்கொண்டு ஹெராயின் போதைப்பொருளைத் தேடி, தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த 11 கிராம் போதை பொருளை  போலீசார் மீட்டனர்.

லக்னோவில் கொரானா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது .இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்களை போலீசார் பிடித்து வழக்கு போட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்டின்பால், மற்றும் சன்னி மாஸிஹ் என்ற இரண்டு வாலிபர்கள் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்கள். ஆனால் ஊரடங்கின் காரணமாக மது கிடைக்கவில்லை ,சரி வழக்கமாக வாங்குமிடத்தில் கஞ்சா வாங்க முடிவு செய்து, இருவரும் மருத்துவர் அணியும்  கொரானா கவசங்களை அணிந்து கொண்டு வெளியே போயினர். அப்போது அவர்களை போலீசார் மடக்கியபோது தாங்கள் கொரானாவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் என்று பொய் சொல்லியுள்ளனர்.

drugs

ஆனால் அவர்கள் போதையிலிருப்பதால் சந்தேகப்பட்ட போலீஸ் அவர்களை விசாரித்து சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 11 கிராம் போதை பொருளை கைப்பற்றி கைது செய்தனர் 
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர்கள் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் ஒரு பாரா மருத்துவ ஊழியராக பணிபுரிகிறார்கள் என தெரிய வந்தது. இருவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்..