பாட்டு பாடி கிண்டல் செய்த முதியவர்: அடித்து கொன்ற பெண்ணின் குடும்பம்; சேலத்தில் பரபரப்பு!

 

பாட்டு பாடி கிண்டல் செய்த முதியவர்:  அடித்து கொன்ற பெண்ணின் குடும்பம்; சேலத்தில் பரபரப்பு!

குடிபோதையில் பாட்டு பாடி கிண்டல் செய்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் : குடிபோதையில் பாட்டு பாடி கிண்டல் செய்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அம்மாபேட்டையை  சேர்ந்தவர் ஆறுமுகம் . கட்டிட தொழிலாளியான இவருக்கு இவருக்கு பெருமாயி, மாதம்மாள் என 2 மனைவிகளும், ஆறுமுகம், மணிகண்டன் என 2 மகன்களும் உள்ளனர். ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களைத் தகாத வார்த்தையால் பேசுவதும், கேலி கிண்டல் செய்து  பாட்டு பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

alcohol

இந்நிலையில் வழக்கம் போல் குடித்து விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வைத்த அவர், வீட்டில் வாசலில் அமர்ந்து கொண்டு பாட்டுப் பாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முரளி என்பவரின் மனைவி நிஷா சென்றுள்ளார். வாரி பார்த்தும் ஆறுமுகம் பாட்டுப் பாடி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. 

arrest

இதனால் ஆத்திரமடைந்த நிஷா, தனது கணவரிடம் இது குறித்துக் கூற ஆத்திரமடைந்த அவரது கணவர் முரளி, அவருடைய தம்பி சரவணன், தாய் மாதம்மாள் ஆகியோர் சென்று ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில், ஆறுமுகத்தை நிஷா குடும்பத்தினர் கட்டையால் தாக்கினர். இதில் ஆறுமுகம் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சமாதானம் செய்து ஆறுமுகத்தை படுக்க வைத்தனர். இருப்பினும் காலை வெகுநேரமாகியும் ஆறுமுகம் எழாததால், சந்தேகமடைந்த அவரது வீட்டார் அருகில் சென்று பார்க்க, அவர் இறந்து விட்டது தெரியவந்துள்ளது. 

crime

இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனையில் கட்டையால் அடித்ததால் தான் ஆறுமுகம் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முரளி, நிஷா, சரவணன், மாதம்மாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்ததோடு,  சேலம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர். 

இதையும் வாசிக்க: சிறையில் ரவுடியுடன் பெண் டாக்டர் கள்ளக் காதல்… திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்தவனின் லீலை..!