திருடின இடத்தில் மிளகாய்பொடி தூவும்போது சிக்கிக்கொண்ட திருடன்!

 

திருடின இடத்தில் மிளகாய்பொடி தூவும்போது சிக்கிக்கொண்ட திருடன்!

முன்பக்க கதவினை உடைத்து வீட்டிலிருந்த நகைகள், 5,000 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சமையலைறைக்கு சென்றிருக்கிறான். அங்கிருந்த டப்பாவிலிருந்து மிளகாய் பொடியை வீடு முழுக்க தூவிவிட்டு கொண்டிருந்திருக்கிறான். தடயத்தை மறைக்கிறாராம்.

திருவண்ணாமலை, போளூர் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவலர் சிவசாம்பு, வெளியூர் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியிருக்கிறார். பூட்டை திறக்க சாவியை தேடும்போதுதான்,  பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பதையும் அறிந்து சத்தம் போட்டிருக்கிறார். திடீரென வீட்டுக்காரர்கள் வீடுதிரும்பியதை அறிந்த திருடன், வீட்டிலிருந்து மேல்மாடிக்கு ஓடிச்சென்று, காம்பவுண்டு சுவர் வழியாக வெளியேற முயன்று கீழே விழுந்துவிட்டான். அவசரத்தில் உயரமான காம்பவுண்ட் சுவரிலிருந்து குதித்தால், காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாமல் சிக்கிக்கொண்ட காளசமுத்திரத்தைச் சேர்ந்த சதீஷ் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Chili powder spray technique of thief

இந்த க்ரைமுக்குப் பின்னாடி இருக்கும் காமெடியையும் கேளுங்கள். பூட்டியிருந்த சிவசாம்புவின் வீட்டை நோட்டமிட்ட சதீஷ், முன்பக்க கதவினை உடைத்து வீட்டிலிருந்த நகைகள், 5,000 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சமையலைறைக்கு சென்றிருக்கிறான். அங்கிருந்த டப்பாவிலிருந்து மிளகாய் பொடியை வீடு முழுக்க தூவிவிட்டு கொண்டிருந்திருக்கிறான். தடயத்தை மறைக்கிறாராம். திருடுனோமா போனோமா என்றில்லாமல் தடயத்தை அழிக்க முற்பட்டு சிக்கிக்கொண்டிருக்கிறான் திருடன். திருடனுக்கு காலில் அடிபட்டதும் ஒருவகையில் நல்லதுதான். காலில் அடிபடாமல் போயிருந்தால், காவலர்கள் கழிவறைக்கு அழைத்துச் சென்று கையை உடைத்திருப்பார்கள்.