வழக்கில் மகனுக்கு ஆதரவாக செயல்பட மாட்டேன் – கொடியேரி பாலகிருஷ்ணன்.

 

வழக்கில் மகனுக்கு ஆதரவாக செயல்பட மாட்டேன் – கொடியேரி பாலகிருஷ்ணன்.

துபாய் பார் ஒன்றில் டான்சராக, பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், பினோய் கொடியேறிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்பெண் கர்ப்பமாகி, தற்போது தாயாகி இருக்கிறார். தனக்கு வாழ்க்கை தர மறுப்பதாக பினோய்மீது மும்பை காவல்துறையில் புகார் அளித்து அதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளார்.

துபாய் பார் ஒன்றில் டான்சராக, பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், பினோய் கொடியேறிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்பெண் கர்ப்பமாகி, தற்போது தாயாகி இருக்கிறார். தனக்கு வாழ்க்கை தர மறுப்பதாக பினோய்மீது மும்பை காவல்துறையில் புகார் அளித்து அதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளார். இந்த பினோய் யாரென்றால், கேரள சிபிஎம் கட்சியின் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன். ஆட்சி தம் வசம் இருப்பதால், தன் மகன் மீதான குற்றச்சாட்டை எளிதில் உடைத்துவிடலாம் என நினைத்த பாலகிருஷ்ணனின் மனைவி வினோதினி, புகார் கூறிய இளம்பெண்ணை மிரட்டியிருக்கிறார்.

Binoy Kodiyeri

இதுகுறித்து பாலகிருஷ்ணனனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “என் மகன் சம்பந்தப்பட்ட வழக்கில் சமரசம் பேச என் தரப்பிலிருந்து யாரும் முயற்சி செய்யவில்லை. கடந்த ஜனவரி மாதம் வீட்டில் நோட்டீஸ் வந்தபோதுதான், இந்தப் பிரச்னை குறித்து எனக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாய் என்ற முறையில் என் மனைவி வினோதினி மும்பை சென்று விவரங்கள் கேட்டறிந்தார். இருப்பினும், இது சம்பந்தமாக எந்த உதவியும் நான் செய்யமாட்டேன் என்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டேன். கட்சி நிர்வாகி என்ற நிலையில் நான் இந்த விஷயத்தில் தலையிடமாட்டேன். இது பொய்ப் புகார் என என் மகன் பினோய் கூறுகிறார். இதுகுறித்து கோர்ட்டு முடிவு செய்யட்டும். தலைமறைவாக இருக்கும் பினோயைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது” என்றிருக்கிறார்.