ஓடும் காரில் இருந்து கல்லூரி மாணவியை சாலையில் வீசிய இளைஞர்கள்

 
c

தெரிந்தவர் என்று நம்பி இரவில் காரில் ஏறிய அந்தக் கல்லூரி மாணவிக்கு அந்த கதி ஏற்பட்டிருக்கிறது .  மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஓடும் காருக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் காரில் இருந்து சாலையில் தூக்கி வீசி சென்று இருக்கிறார்கள் .

திரிபுரா மாநிலத்தில் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அமடாலி பைபாஸ் சாலையில் இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.   அந்த வழியாக சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  

 மருத்துவ பரிசோதனையில் அந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது . இதை அடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  போலீசார் நடத்திய விசாரணையில் தான் அவர் கல்லூரி மாணவி என்று தெரியவந்திருக்கிறது.

ச்ச்

 இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஏற்கனவே தனக்கு அறிமுகமான கௌதம் சர்மா என்பவர் காரில் வந்தார்.  அவர் தன்னை காரில் ஏறிக்கொள்ள சொன்னார். நன்கு அறிமுகமானவர் என்பதால் அவரை நம்பி காரில் ஏறினேன்.  ஆனால் காருக்குள் கௌதம் சர்மாவின் நண்பர்கள் இரண்டு பேர் இருந்தார்கள் . 

கார் ஓடிக்கொண்டிருந்த போது என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்கள்.  அதற்கு மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து காரிலிருந்து குதிக்க முற்பட்ட போது மூன்று பேரும் சேர்ந்து மடக்கி போட்டு பாலியல்  பலாத்காரம் செய்தார்கள்.   ஓடும் காருக்குள் மூன்று பேரும் மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இதில் நான் மயக்கம் அடைந்து விட்டேன்.  அதன் பின்னர் தான் அமடாலி பைபாஸ் சாலையில் என்னை வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

 பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணயின் பெற்றோருக்கு போலீசார் தகவல் சொல்ல,  பெற்றோர் வந்து மகளை பார்த்து கதறி இருக்கிறார்கள்.  மாணவியரின் தாய் அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம் சர்மாவை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.  அவரிடம் மற்ற இரண்டு பேரையும் பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.