தலித் பெண்ணை திருமணம் செய்ததால் வாலிபருக்கு ரூ.6 லட்சம் அபராதம்! மொட்டையடித்து ஊர்வலம்

 
m

தலித் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக இளைஞரை 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி வசூலித்து இருக்கிறார்கள்.  மொட்டையடித்தும் ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றிருகிறார்கள்.  வசூலித்த அந்த 15 பேர்  கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

 கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பகுதியில் கொங்கள்ளி கிராமம்.  இக்கிராமத்தில் வசித்து வரும் தலித் பெண்ணை அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் காதலித்து வந்திருக்கிறார்.  இந்த காதலுக்கு இளைஞரின் வீட்டினரும் ஊராரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

 எதிர்ப்பை மீறிய வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2018ல் திருமணம் செய்திருக்கிறார்.   திருமணத்திற்கு பின்னர் இருவரும் வெளியூரில் வசித்து வந்துள்ளார்கள்.  இந்த நிலையில் வெங்கடேசன் பெற்றோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.   அதனால் அவரை பார்ப்பதற்காக கவனித்துக் கொள்வதற்காகவும் மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்   வெங்கடேசன் .

g

அப்போது அவர் சாதிக்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நீ தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறோம்.  திரும்பவும் நீ வந்தது எங்களை இழிவுபடுத்தும் செயல்.   அதனால்  இங்கு வந்ததற்கும் உன்னுடைய பெற்றோரை சந்தித்து பேசுவதற்கும் 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் . 

ஏற்கனவே பெற்றோர் உடல் நிலையை பார்த்து மன வேதனைகளில் இருந்து வெங்கடேசன்,  அவர்களிடம் வாதம் எதுவும் செய்யாமல் ஆறு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துவதாக ஒப்பு கொண்டிருக்கிறார்.   அதன்படியே 6 லட்சம் ரூபாய் பணத்தையும் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் 15 பேரிடம் ஒப்படைத்திருக்கிறார்.   அதன் பின்னரும்  பஞ்சாயத்தார்,   தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக வெங்கடேசனை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் . பெற்றோர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட வெங்கடேசன் .

மொட்டை அடித்து ஊர்வலமாக வர தயாராக இருந்திருக்கிறார் வெங்கடேசன்.            இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் மனைவி தலித் பெண் இதுகுறித்து கொள்ளேகால் துணை போலி சூப்பர் என்ற இடம் புகார் அளித்திருக்கிறார் .  போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கிராமத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள்15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இதனால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.