குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை
சென்னை எண்ணூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் அருகே இரு இளைஞர்கள் நேற்று இரவு வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த மகேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த நிலையில், சதீஷ் வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது வெளியில் தனியாக நின்றிருந்த மகேஷிடம் குடிபோதையில் வந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகேஷ், குடிபோதையில் இருந்த நபரை தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்தவர் எழுந்திருக்காமல் இருக்கவே, மகேஷ் அருகில் இருந்த லாரி ஓட்டுனரிடம்சென்று தண்ணீரை வாங்கி வந்து கீழே விழுந்தவர் முகத்தில் தெளித்து உள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்காமல் சடலமாக கிடந்ததால்,உடனடியாக வீட்டிலிருந்து சதீஷை அழைத்துக் கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த லாரி ஓட்டுநர், சந்தேகத்துக்கு இடமாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அப்பகுதியாக வந்த திருநங்கை வீட்டு வாசலில் ஒருவர் விழுந்து கிடப்பதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் விசாரித்த பொழுது, அருகில் இருந்த லாரி ஓட்டுநர் தன்னிடம் தண்ணீர் வாங்கி சென்று சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இரு சக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை செய்ததில், அன்னை சிவகாமி நகர் பகுதியில் சேர்ந்த மகேஷ் என்பது தெரிய வந்தது. உடனடியாக எண்ணூர் போலீசார் மகேஷ்சை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த நபர் யார் என்பதும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது அடையாமல் தெரியாமல் இருப்பதால், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்


