இளைஞர் சரமாரி வெட்டி கொலை! பரமக்குடியில் பரபரப்பு

 
Murder

பரமக்குடியில் இளைஞரை வெட்டி கொடூரமாக கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

murder

சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ்(21), இவருக்கும் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்பிரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஹரிஷ் தனது நண்பர் அபிபாலன் (21), என்பவருடன் பரமக்குடி ஆற்றுப்பாலம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வைகை நகரைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் அறிவாளால் ஹரிஸின் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ஹரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

படுகாயம் அடைந்த அபிபாலன் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்‌. இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு இளைஞர் ஹரிஸை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை ஹரிஸின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து உடலை பெற்றுக் கொண்டனர். இளைஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.