நிர்வாண பூஜையில் பங்கேற்க இளம் பெண்கள் தேவை! தலா ஒரு லட்ச ரூபாய் சன்மானம்! அதிரவைத்த போலி பூசாரி

 
ப்

 நிர்வாண பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்வதற்கு இளம் பெண்கள்  தேவை . இதில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்று போலி பூசாரி சொல்ல,  அதைக் கேட்டு  ஆசை வார்த்தை சொல்லி இளம்பெண்களை அழைத்துச் செல்ல,  நிர்வாண பூஜையில் இருந்து தப்பி ஓடிய பெண்களால் போலி சாமியார் உள்பட 12 கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் உள்ளார் நாகேஸ்வரராவ் என்கிற போலி பூசாரி.   இவர் பில்லி ,சூனியம் வைப்பது எடுப்பது என்று அந்தப் பகுதி மக்களிடையே தொடர்ந்து  பணம் பறித்து வந்திருக்கிறார் .  இவர் நிர்வாண பூஜை,  இரவு பூஜை என்கிற பெயரில் பாலியல் அத்து மீறல்களிலும் ஈடுபட நினைத்திருக்கிறார்.

 இதற்காக தன் நண்பர் நாகேந்திர பாபு என்பவரிடம் ஒரு மணி நேரம் நடைபெறக்கூடிய நிர்வாண பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்ய இளம்பெண்கள் வேண்டும். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் என்று சொல்ல,  இந்த நிர்வாண பூஜையின் மூலமாக புதையலும் கிடைக்கும் என்று சொல்ல அதை நம்பி நாகேந்திர பாபு தன்னுடன் படித்த  இளம் பெண் ஒருவரை ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி  அழைத்துச் சென்று இருக்கிறார்.

அர்ர்

குண்டூரில் ஒரு லாட்ஜில் அந்த பெண்ணை தங்க வைத்திருக்கிறார். அங்கு மேலும் ஒரு பூஜையில் பங்கேற்க வந்திருக்கிறார்.  அந்த பெண்ணை வேறு சிலர் அழைத்து வந்திருக்கிறார்கள்.   கடந்த ஒன்பதாம் தேதி இரண்டு பெண்களையும் குண்டூர் அருகே பூனக்கல்லு கிராமத்தில் உள்ள போலி பூசாரி நாகேஸ்வரராவ் வீட்டிற்கு அழைத்துச் சென்று  நிர்வாண பூஜை நடத்தி இருக்கிறார்கள். 

 இரண்டு பெண்களையும் ஒரு அறையில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி பூஜை என்கிற பெயரில் அப்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றி இருக்கிறார் நாகேஷ்வரராவ்.  அந்த பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பூஜையை பாதியில் நிறுத்தி இருக்கிறார் நாகேஸ்வரராவ்.   இரவு பூஜை விவகாரம் வெளியே கசிந்து,  திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர்,  ‘’என்ன நடக்கிறது இங்கே..போலீசிடம்நாங்கள் போகவா...’’ என்று சத்தம்போட,  பயந்துபோன பூசாரி, இரண்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு சிலக்கலூர் பேட்டை பகுதியிலிருந்து தன் நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

 கடந்த 11ஆம் தேதி அங்கு மீண்டும் நிர்வாண பூஜை நடத்த இயன்றிருக்கிறார்.   அப்போது அந்த பெண்களிடம் மீண்டும் நாகேஸ்வரரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்க பயந்து போன அந்த பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.   தங்கள் செல்போனில் இருந்த திசா செயலி மூலம் போலீசாருக்கு தகவல் கொடுக்க ,  போலீசார்  வந்து இரண்டு பெண்களை  மீட்டு உள்ளனர்.  அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

 போலீசின் விசாரணையில் நாகேஸ்வரராவ் அவருக்கு உதவிய நாகேந்திர பாபு ஆகியோர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இதில்  5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில்  கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.