காதலை ஏற்க மறுத்ததால் நடு ரோட்டில் இளம்பெண் குத்திக்கொலை

 
d

பெங்களூருவில் காதலை ஏற்க மறுத்ததால் நடு ரோட்டில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம்

ஜீவன் பீமாநகர் பகுதியை சேர்ந்த அம்ருதா, சட்டப்படிப்பு படித்துக் கொண்டே ஒரு பீட்சா கடையில் வேலை செய்து வந்தார். இவரது வீட்டருகே வசித்த தனுஷூம், அம்ருதாவும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தனுஷுக்கு இதற்கு முன்பு திருமணமாகி, விவாகரத்து ஆகி, ஒரு குழந்தையும் இருந்தது. அவர் இந்த விஷயத்தை அம்ருதாவிடம் இருந்து மறைத்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு பின் உண்மையை அறிந்த அம்ருதா, தனுஷிடம் இருந்து விலகினார். இந்தப் பிரச்சினையின் காரணமாக, தனுஷின் தம்பி சூர்யா, அம்ருதாவைக் கொல்ல முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அம்ருதா வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, லாரிக்குப் பின்னால் மறைந்திருந்த சூர்யா, திடீரென கத்தியால் அவரைத் தாக்கினான். அம்ருதாவின் முதுகிலும் மார்பிலும் கத்தியால் குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அம்ருதாவை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களையும் தாக்கிய சூர்யா, அங்கிருந்து தப்பிச் சென்றான். ஜீவன்பிமானகர் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட சூர்யா மற்றும் அவனது சகோதரன் தனுஷ் ஆகியோரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காதல் விவகாரத்தில் ஒரு இளம் பெண்ணின் உயிர் பறிக்கப்பட்ட இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.