லவ் டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை- துக்கம் விசாரிக்க சென்ற இளைஞரும் அடித்துக் கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் ஒரு தலைக் காதல் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி அருகே பெரியவிளையில், ஒருதலைக் காதல் தொல்லையால் ஏஞ்சல் (26) என்ற இளம்பெண் தற்கொலை. இதையடுத்து, அவருக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஆண்டனிராஜ் (30) என்பவரை ஆத்திரமடைந்த உறவினர்கள் கல்லாலும் கட்டையாலும் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதமே மென் பொறியாளரான ஏஞ்சலின் தந்தை கொடுத்த புகாரில், இளைஞர் ஆண்டனி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வந்த பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலில் ஏஞ்சல் விபரீத முடிவு எடுத்துள்ளார். இரு உடல்களையும் மீட்டு போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர். காவல்துறையிடம் முறையாகப் புகார் அளித்தும், ஆண்டனி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதுவே ஏஞ்சலினின் தற்கொலைக்கும், தொடர்ந்து நடந்த ஆண்டனியின் கொலைக்கும் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

