இளம்பெண் தலையில் அடித்து கொலை! பொங்கல் தினத்தில் நடந்த சோகம்

 
murder murder

குண்டடம் அருகே இளம்பெண் தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் கிராமம், வரபருதுதி காட்டுதோட்டம் என்ற பகுதியில் , பூங்கொடி (25) என்ற இளம்பெண் பிணமாக கிடப்பதாக, குண்டடம் காவல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், நேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து (35), இவரது மனைவி பூங்கொடி,(26) இவர்களுக்கு கவிநேசன் (7),
லிதன்ய (3) என, இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியவந்தது . பூங்கொடியின் தந்தை கணேசன் (57), தாய் வசந்தி (44), ஒரே மகளான பூங்கொடி, 16 வயதில் அங்கமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சில ஆண்டுகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக, கணவன் – மனைவி இடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், தனியார் பேருந்தின் நடத்துனராக பணிபுரிந்து வரும் அங்கமுத்து, அடிக்கடி மது அருந்திவிட்டு,
மனைவி பூங்கொடியை தாக்கி துன்புறுத்தி வந்ததாகவும் உறவினர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இன்று வரபருதுதி காட்டுதோட்டம் பகுதியில், தலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் முகம் சிதைந்து பூங்கொடி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில்,
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், திருப்பூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தியதில் இக்கொலை சம்பவமனது காலை 6 முதல் 7:00 மணிக்குள் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை எடுத்து சம்பவ இடத்தில் இருந்த பூங்கொடியின் கணவரான அங்கமுத்துவை சந்தேகத்தின் பேரில் குண்டடம் காவல்துறையினர் அழைத்துச் சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர் . பூங்கொடி கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்று . குண்டடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக, குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.