கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

 
murder

கள்ளக்காதல் விவகாரத்தில் புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தில் என்ஜினீயர், கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

murder


புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம்  மணப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்- சாந்தி தம்பதியரின் மூத்த மகன் மணிகண்டன் (வயது 35). இவர் கெமிக்கல் என்ஜினீயர். சமீபத்தில் சென்னையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புதுச்சேரி வந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது தந்தை ஏற்கனவே இறந்த நிலையில், தாய் சாந்தி பராமரிப்பில்  இருந்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. 

இந்த நிலையில் தனது வீட்டில் அருகில் வசிக்கும் வசந்தராஜா (வயது 47) என்பவரின் மனைவியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து அவரது மனைவிக்கு மணிகண்டன் உதவியாக இருந்து வந்துள்ளார். இதனால் மணிகண்டனுக்கும், வசந்தராஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வீட்டில் படுத்து இருந்த மணிகண்டனை எழுப்பி அவரது தாயார் சாந்தி காபி கொடுத்து விட்டு கூலி வேலைக்கு கத்திரிக்காய் அறுக்க சென்றுவிட்டார். இதை நோட்டமிட்டு இருந்த வசந்தராஜா வீட்டில் படுத்து இருந்த மணிகண்டனை கட்டப்பாரையால் தலையில் தாக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வசந்தராஜாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.