"திடீரென்று துணியில்லாமல் நின்ற பெண்" -பார்த்த வாலிபருக்கு படிப்படியாக வந்த சோதனை.

 
video call

 வீடியோ அழைப்பில் ஒரு வாலிபர் முன் ஆபாசமாக தோன்றிய இளம்பெண் பணம் கேட்டு மிரட்டியதால் ,போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர் 

தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் முளகுமூடு பகுதியை சேர்ந்த ஒரு பட்டதாரி வாலிபர் அடிக்கடி செல்போனில் உள்ள  சமூக ஊடக கணக்கில் ஆக்டிவாக இருந்து வருவார் .அவர் இரவெல்லாம் எந்நேரமும் போனில் அந்த ஊடக கணக்கில் பலரோடு சாட் செய்து வருவார் .
இந்நிலையில் அந்த வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நள்ளிரவில் ஒரு வீடியோ கால்  மூலம் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஆன் செய்து அவர் பேசிய போது ,எதிர்முனையில் ஒரு இளம்பெண் ஆபாசமாக துணியே இல்லாமல் தோன்றி இருக்கிறார். இதை சற்றும் எதிா்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்து சுதாரிப்பதற்குள் வீடியோ அழைப்பை அந்த பெண் ரெக்கார்ட் செய்துள்ளார். பின்னர் அந்த பெண் போனை கட் பண்ணிவிட்டு போய் விட்டார் 
அதன் பிறகு அந்த வாலிபரையும், அந்த பெண்ணையும் ஆபாசமாக சித்தரித்து ஒரு கூட்டம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர். கேட்ட பணம் கொடுக்கவில்லை எனில் அந்த வீடியோவை முகநூலில் பதிவிடுவதாகவும் கூறியுள்ளனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் செய்வதறியாது திகைத்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணையும் அவர் சேர்ந்த கூட்டத்தையும் கைது செய்ய சைபர் க்ரைம் மூலம் முயற்சித்து வருகின்றனர் .