"தூங்கிய ஆத்தா ,திடீர்னு முழிச்சி பார்த்தா .."மகள் செய்த காரியத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி

 
girl murder her family by poison

சொத்துக்காக தன் தாயாரை கொலை செய்ய முயன்ற மகளை போலீசார் கைது செய்தனர்  

murder
கோவை கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி என்கிற சின்ன ராமாத்தாள் (75). இவரது கணவர் கருப்பசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஜோதிமணி (45 ) என்ற மகள் உள்ளார்.பாப்பாத்திக்கு சொந்தமான இடம் நீலாம்பூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஜோதிமணிக்கு அவரது கணவர் சிவகுமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஜோதிமணி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார்.அப்போது அந்த மகள்  தன் தாயாரின் சொத்துக்களை அடைய ஆசைப்பட்டார் 

.அதனால் சொத்துக்காக தன்  தாயாரை கொன்று விடலாம் என்ற திட்டம் தீட்டிய ஜோதிமணி ,ஒரு நாள் இரவு தன் தாயார் பாப்பாத்தியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றார்.
அப்போது சுதாரித்துக்கொண்ட பாப்பாத்தி அம்மாள் கட்டிலின் அருகே இருந்த பொருட்களை தட்டிவிட்டு சத்தம் எழுப்பினார்.  மேலும் ஆத்திரம் தீராத ஜோதிமணி வீட்டின் வெளியே இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தனது தாயார் பாப்பாத்தி காலில் போட்டார். இதில் இரண்டு கால்களும் உடைந்து ரத்தவெள்ளத்தில் பாப்பாத்தி கிடந்தார்.
இவர்களது சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் பாப்பாத்தியை அங்கிருந்து மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து பாப்பாத்தி கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் .