"மசாஜ் பண்ணிட்டேன் வேற என்ன சார் பண்ணனும்?" -அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பெண்ணுக்கு இன்ஸ்பெக்டரால் நேர்ந்த கொடுமை

 
lochup


புகார் அளிக்க சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டருக்கு  மசாஜ் செய்த  வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா

arrest

பீகார் மாநிலம்  சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா போலீஸ் நிலைய சரகத்தில்  ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணுக்கு சில குடும்ப பிரச்சினைகள் இருந்ததால் ,அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி  சசிபூஷன் சின்ஹா அந்த பெண்னை தனக்கு  மசாஜ் செய்ய கூறி உள்ளார். அதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியாகி என்ன செய்வதென்று விழித்த போது ,அந்த இன்ஸ்பெக்ட்டர் மீண்டும் அப்பெண்ணிடம் தனக்கு மசாஜ் செய்ய வில்லையென்றால் ஸ்டேஷனை விட்டு வெளியேற சொன்னார் .அதை கேட்ட அந்த பெண் வேறு வழியின்றி அவருக்கு கழுத்து ,மற்றும் உடல் முழுவதும் மசாஜ் செய்து உள்ளார். இந்த காட்சியை அந்த ஸ்டேஷனில் அந்த இன்ஸ்பெக்ட்டருக்கு வேண்டாத நபர்கள்  சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து அதை சமூக ஊடகத்தில் வைரலாக்கி விட்டனர்  .

அந்த வைரலான  வீடியோவில் போலீஸ் அதிகாரி சசிபூஷன் சட்டை அணியாமல்  அமர்ந்து உள்ளார். அந்த பெண் மசாஜ் செய்து முடித்ததும் ,அந்த அதிகாரியிடம் வேறு என்ன செய்தால் புகாரை ஏற்றுக்கொள்வீர்கள் என்று கேட்டதும் அவரின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது .புகார் அளிக்க சென்ற பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் மசாஜ் செய்துகொண்ட  வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.