"முதலிரவு முடிறதுக்குள்ள மூட்டை கட்டிட்டியே ..."புது மாப்பிள்ளையை புது ரூட்டில் ஏமாற்றிய பெண் .

 
cash

மணப்பெண் தேடி விளம்பரம் கொடுக்கும் வாலிபர்களுக்கு இளம்பெண்களை திருமணம் செய்து பணம் மோசடி செய்த கூட்டத்தினை போலீசார் கைது செய்தனர் 

marriage

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான மணிகண்டன் ,கேரள-தமிழக எல்லை கொழிஞ்சாம்பாறை பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன் திருமணத்திற்கு பெண் தேடி விளம்பரம் செய்துள்ளார் அப்போது இவரிடம் கார்த்திகேயன் மற்றும் சுனில் ஆகிய தொடர்பு கொண்டு தங்களின் தங்கையை திருமணம் செய்து கொடுப்பதாக கூறி 1.5 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டனர்  

பிறகு கார்த்திகேயன் தனது தங்கையான சஜீதாவை  கடந்த டிசம்பர் 12ம் தேதி மணிகண்டனிற்கு ஒரு கோயிலில் திருமணம் செய்து வைத்தார்.திருமணம் முடிந்ததும் புது மாப்பிளை மணிகண்டன் தன் வீட்டில் முதலிரவுக்காக காத்திருந்தார் .அப்போது அந்த பெண் தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை ,போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி ஓடி விட்டார் 
பின்னர் மாப்பிளை அந்த சஜீதாவுக்கு  போன் செய்து பார்த்தார். ஆனால் போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்ததால்   சந்தேகடைந்த மணிகண்டன் பாலக்காடு சென்று விசாரித்தார். அப்போது கார்த்திகேயனுடன் சேர்ந்த கும்பல் இளம்பெண்களை காட்டி திருமண மோசடி செய்கிற கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன்  போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்த சஜீதா , தேவி , சகீதா , சுனில் கார்த்திகேயன் என 5 பேரை கைது செய்தனர்.இந்த கும்பல் இது போல் பலரிடம் கல்யாணம் செய்து வைத்து ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது