" கட்டிக்க போறவரின் கண்களை கட்டி.."மணமகனிடம் வெறியை தீர்த்து கொண்ட மணப்பெண்

 
marriage


 
அடுத்த மாதம் தன்னை திருமணம் செய்ய இருந்த இளைஞரை ரகசியமாக வரவழைத்து, அவரது கழுத்தை அறுத்த மணமகளை போலீசார் கைது செய்தனர்.

iStock-523699180

ஆந்திராவில், , அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான ராமா நாயுடுவுக்கு , சோடாவரத்தை சேர்ந்த புஷ்பா,, என்பவருடன், அடுத்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் புஷ்பாவுக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை ,இருந்தாலும் பெற்றோர் வற்புறுத்தி அவரை கட்டி வைக்க முடிவெடுத்தனர் இந்நிலையில், புஷ்பா நேற்று முன்தினம், ராமா நாயுடுவை பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக சந்திக்க விரும்புவதாக கூறி ,அவரை ஆசையாக பேசி ஒரு இடத்திற்கு வர சொன்னார் .
 அவரின் பேச்சை நம்பி வந்த அந்த மணமகனை , அங்குள்ள  மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்
பின்னர் அந்த மலைக்கோவிளில் அவரின் கண்ணை கட்டி கண்ணா மூச்சு விளையாடலாம் என்று சொல்லி அவரின் கண்ணை கட்டிவிட்டார் .பின்னர் தான்  கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து அந்த மணமகனின் தொண்டையை அறுத்து தன் வெறியை தீர்த்து கொண்டார் . .இதில்  அந்த மணமகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே வீழ்ந்ததும் அவர் தப்பியோடி விட்டார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த இடத்திற்கு வந்தனர் 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், புஷ்பாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.