சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கையை பிடித்து இழுத்து புதருக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டல்

 
Abuse

காஞ்சிபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

women abuse

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அய்யம்பேட்டை பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் (வயது 22)ஒருவர் தங்கி இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அந்த இளம் பெண் தங்கி இருந்த வீட்டிலிருந்து பொருட்களை வாங்க கடைக்கு சென்று பொருட்களைகளை வாங்கிக் கொண்டு திரும்பி உள்ளார்.

வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் சில இளைஞர்கள் இளம்பெண்ணுடன்  நைசாக பேச்சு கொடுத்துக் கொண்டு வந்த நிலையில் திடீரென சாலை ஓரத்தில் இருந்த மறைவான பகுதிக்கு இளம் பெண்ணின் கைப்பிடித்து இழுத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்று உள்ளனர். இதில் சுதாரித்து கொண்டு தப்பித்த இளம் பெண் கூச்சலிட்டபடி வீட்டிற்கு ஓடி  சென்றுள்ளார். இளம் பெண் கூச்சல் இட்டு ஓடியதை தொடர்ந்து இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து இளம் பெண் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்த நிலையில் வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் பெயரில் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த நிலையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாலியல் சீண்டல் குறித்த புகார் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு அடையாளம் கண்டறியப்பட்ட காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதி மேட்டுத் தெருவை சேர்ந்த ரங்கா வயது 23, புதுநகர் பகுதியைச் சேர்ந்த சந்துரு (எ)சந்திரசேகர் வயது 22, இலுப்பைத் தோப்பு தெருவை சேர்ந்த சக்தி (எ) சதீஷ்குமார்  வயது 25 ஆகிய மூன்று இளைஞர்களை தேடிப்பிடித்து கைது செய்தனர். இதில் ரங்கா மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரும் கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.