" கருவை கலைக்க மகள் மறுக்கிறாளே.." -காண்டான தாயும் ,தம்பியும் சேர்ந்த செஞ்ச கொடூரம்.

 
love

  
காதலனால் கர்ப்பமான  மகளை ஒரு தாயாரும் அவரின் சகோதரரும் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது 

Uttar Pradesh: Woman strangles pregnant minor girl with son’s help, tries to pass off crime as suicide [Representative image]
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சௌபேபூர் பகுதியில் வசிக்கும் ஒரு டீனேஜ் பெண் அந்த பகுதியில் வசிக்கும் வேறு சாதியை சேர்ந்த ஒரு நபரை காதலித்து வந்தார் .இது பற்றி கேள்விப்பட்ட அந்த பெண்ணின் தாய் அந்த மகளிடம் அந்த வேறு சாதி பையனோடு இருக்கும் காதலை மறந்து விடுமாறு கூறினார் .ஆனால் அந்த பெண் அப்போது சரியென்று சொல்லி விட்டு ,மீண்டும் அந்த வாலிபருடன் பழகி ,கர்ப்பமாகி விட்டார் .
இதையறிந்த அந்த தாய் மிகவும் கோபமாகி அந்த மகளிடம் அந்த கருவை கலைத்து விட்டு ,அந்த காதலனை விட்டு விலகிவிடுமாறு கூறினார் .ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்து விட்டு ,அந்த காதலனோடுதான் வாழ்வேன் என்று அடம் பிடித்தார்  .
இதையறிந்த அந்த தாய் அவரின் டீனேஜ் மகனுடன் சேர்ந்து  அந்த பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் .பின்னர், அவர்கள் இதை  தற்கொலை வழக்காக மாற்ற முயன்றார்கள் . எனினும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது  தெரியவந்துள்ளது.பின்னர் போலீசார் அந்த மகளை கொன்ற தாய் மாறும் அவரின் மகன் மற்றும் இறந்த பெண்ணின் காதலர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்