"உடைகளை ஒரு இடத்திலும்,உடலை வேறு இடத்திலும் வீசி ..." -நிர்வாணமாக கிடந்த பெண்ணுக்கு நேர்ந்தது என்ன ?

 
rape


ஒரு பெண்ணின் நிர்வாண உடல் காட்டு பகுதியில் கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Chandigarh: Woman's naked body found in Maloya; police suspect sexual assault
ஹரியானா மாநிலம் சண்டிகரின் மலோயாவில் காய்கறி விற்பனையாளரான இருக்கும் ஒருவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மார்க்கெட் சென்ற அந்த பெண் திடீரென்று மாயமானார் இதனால் அந்த பெண்ணின் கணவர் பல இடங்களில் இரவு முழுவதும் தேடியும் கிடைக்காததால், அவர் அங்குள்ள காவல் நிலையத்திற்க்கு சென்று புகார் கொடுத்தார்  

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர் .அப்போது புதன்கிழமை காலை 40 வயதுடைய பெண் ஒருவரின் நிர்வாண சடலம் மாலோயாவின் வனப்பகுதியில் , வாயில் ஒரு ஜோடி காலுறைகள் அடைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ஒருவர் போலீசில் சென்று தகவல் கூறினார் . போலீசார் உடனே அவர் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது ,அந்த பெண்ணின் உடைகள் ஒரு இடத்திலும், அவரின்  நிர்வாண உடல் ஓரிடத்திலும் கிடந்தது .போலீசார் அந்த உடலை பரிசோதித்த போது அவரை  கழுத்தை நெரித்து கொன்று, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்