பெண்ணை கொலை செய்து பாலியல் வன்கொடுமை! சென்னையில் அதிர்ச்சி
Updated: Feb 24, 2026, 17:56 IST1771935992010
சென்னையில் சாலையில் வசித்த பெண் கொலை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜெ.ஜெ.நகரில் சாலையோரம் யாசகம் பெற்று பிழைப்பை நடத்தி வந்த பெண்ணை கொலை செய்த பிறகு மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த அந்த நபர், இரும்புக் கம்பியால் பெண்ணை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் காலையில் அதே இடத்திற்கு சென்ற அந்த நபர், பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றத்தை செய்தவர் மதுரையை சேர்ந்த இளைஞர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர். கைதான இளைஞரின் பெயர் ஷேக், வயது 26 என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது 54 என்றும் தெரியவந்துள்ளது.

