"காசு கொடுத்திடறேன் , கையை எடுக்கிறியா ?"-பார்க் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
women gang rape by five man
rape
பார்க்கில் வாக்கிங் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்த நபரை போலீஸ் தேடுகிறது .
தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில்  பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கேபிஆர் பூங்காவில் 22 வயது பெண் ஒருவர் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம் .அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பிலிம் நகரில் வசிக்கிறார் .தினமும் வாக்கிங் செல்லும் அந்த  பெண்ணை அந்த பார்க்கில் வசிக்கும் ஒரு நபர் நோட்டமிட்டு வந்தார் .கடந்த நவம்பர் 2ம் தேதி அந்த பெண் வழக்கம் போல வாக்கிங் சென்றார் .அப்போது அந்த நபர் அவரின் கையை பிடித்து இழுத்து அங்குள்ள புதர் பக்கம் இழுத்து சென்று ,அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார் .மேலும் பணம் கொடுக்கவில்லையென்றால் அவரை பலாத்காரம் செய்து விடுவதாக கூறியதும் அந்த பெண் பயந்து போய் அந்த நபரிடம் தன்னிடமிருந்த  2500 ரூபாய் பணத்தை கொடுத்தார் .அதன் பின்னர் அந்த பெண் கூச்சல் போட்டு கத்தினார் .
அதன் பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்து ,அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை தேடி அந்த பார்க்குக்கு வந்து ,அந்த நபரை பற்றி விசாரித்து வருகின்றனர் .இதே போல் டோலிவுட் நடிகை ஷாலு சௌரசியாவும் அதே பார்க்கில் ஏற்கனவே இது போல் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது . எனவே அதே நபர் குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.