"டிக் டாக்ல வர்றவன் ஏன்டி வீட்டுக்கு வரான் .."கண்டித்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கதி .

 
murder


காதலனுடன் சேர்ந்து ஒரு கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் 

Woman kills husband with help of TikTok lover, relative in Bengaluru
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹரோக்யதனஹள்ளியில், 37 வயது பெண் நேத்ரா தன்னுடைய கணவர் ஸ்வாமிராஜுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு டிக் டாக் வீடியோவில் வரும் பரத் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டது .அதனால் அந்த பெண்ணும் அந்த பரத்தும் அடிக்கடி சந்தித்து கொண்டனர் .அப்போது அந்த நட்பு கள்ள உறவாக மாறியது .அதன் பிறகு அந்த நேத்ரா அந்த கணவருக்கு தெரியாமல் அந்த பரத்துடன் ஒரு வீடு எடுத்து உல்லாசமாக இருந்தார் .
பின்னர்  அந்த பெண்ணின் காதலையறிந்த அந்த கணவர் அந்த மனைவி நேத்ராவை கண்டித்தார் .அதனால் அந்த பெண், தன் கணவனை அவரின் காதலன் பரத் மற்றும் அவரின் நண்பர் விஜய் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஒரு இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார் .அதன் பிறகு போலீசுக்கு இந்தக்கொலை விஷயம் பற்றி தெரிந்ததும் வழக்கு பதிந்து அந்த மனைவியை  பிடித்து விசாரித்தனர் .ஆனால்  அந்த பெண் சொத்துக்கு ஆசைப்பட்டும்  அந்த காதலனின் உறவுக்கு ஆசைப்பட்டும்  இந்த  கொலையை செய்துவிட்டதாக இறந்தவரின் முதல் மனைவி  வாக்குமூலம் கொடுத்தார்  .அடுத்து நேத்ராவிடம் நடத்திய போலீஸ் விசாரணையின் போது, ​​ தனது வளர்ப்பு மகளிடம் சுவாமிராஜ் தவறாக நடந்து கொண்டதாகவும், அதனால் தான் அவரை கொலை செய்ததாகவும் கூறினார்.