பேருந்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! ஓட்டுநர், நடத்துனர் கைது

 
s

தலைநகர் டெல்லியில் தனியார் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Delhi Bus Rape Case : धक्कादायक, देशाच्या राजधानीत स्लीपर बसमध्ये विवाहित  महिलेवर बलात्कार https://t.co/7WGRosHq7q #Delhi #Rape #Bus

டெல்லியில் கடந்த திங்கள்கிழமை அன்று நிறுத்தப்பட்டிருந்த படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்றில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரின்படி, பேருந்தினுள் இரண்டு ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பிதாம்புராவில் உள்ள ஒரு குடிசைப் பகுதியைச் சேர்ந்தவராவார். மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர். மே 11 ஆம் தேதி இரவு, அப்பெண் வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​சரஸ்வதி விஹாரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு படுக்கை வசதி கொண்ட பேருந்து வந்து நின்றது. பேருந்தின் கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு நபரிடம் அந்தப் பெண் நேரம் கேட்பதற்காக அணுகியதாகவும், அதன் பிறகு அவர் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் பேருந்தை நங்லோய் நோக்கி ஓட்டிச் சென்றதாகவும், அங்குதான் பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை தகவல்படி, அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.