"அடிப்பாவி உன்னை கொலை செஞ்சிட்டதா புருஷன் ஜெயிலில் இருக்கான்" -காதலுடன் வாழ ஒரு பெண் போட்ட திட்டம்

 
murder


கணவரை கொலை வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு காதலனுடன் ஒரு பெண் வாழ்வதை கண்ட போலீசார் அந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர் 

love
பீகார் மாநிலத்தை சேர்ந்த சாந்தி தேவி என்ற பெண்மணி, லக்ஷ்மிபூரில் வசிக்கும் தினேஷ் ராம் என்பவரை ஜூன் 14, 2016 அன்று மணந்தார்.ஆனால் அப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்துள்ளார் .அதனால் அந்த பெண் கணவரை பிரிந்து விட்டு அந்த  காதலனுடன் வாழ திட்டம் போட்டார் .அதன் படி அந்த கணவனிடம்  அவரின் மனைவி அடிக்கடி தகராறு செய்து, தன்னை வரதட்சணை கொடுமை படுத்துவதாக கூறி விட்டு திடீரென்று தலை மறைவாகி விட்டார் .பின்னர் பெண் காணாமல் போனதால் அதிர்ச்சியான  அவரின் தந்தை அப்பெண்ணின் கணவர் தன் மகளை கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அப்பெண்னின் கணவரை  கைது செய்து சிறயில் அடைத்தனர் 
அதன் பின்னர் பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஜலந்தரில் தனது காதலனுடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரை கொலை செய்ததாக சிறயில் கணவர் இருக்கும் நிலையில், இப்படி அப்பெண் உயிரோடு தலை மறைவு வாழ்க்கை வாழ்வதை கண்ட பொலிஸார் அந்த வழக்கை  மீண்டும் விசாரித்து வருகின்றனர்