மாமியாரை பைக்கில் அழைத்து சென்று ஹெல்மெட்டால் தாக்கி கொன்ற மருமகன்
தெலங்கானாவில் மாமியாரை பைக்கில் அழைத்து சென்று ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்த கொடூர மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டம் செங்கிசெர்லா ஆர்.டி.சி காலனியைச் சேர்ந்த கொல்லா அருணா (39) என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் காவ்யா (19), கரீம்நகர், சந்தன்பூரைச் சேர்ந்த கரு ஸ்நேஹித் (28) என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு, ஸ்நேஹித் மாமியார் அருணாவிற்கு போன் செய்து எதோ ஆவோசத்தில் உன் மகளை திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறேன். உன் மகளுக்குச் சின்னச் சின்ன விஷயங்களுக்கு பெரியதாக பேசிகிறாள் என்று கூறினார்.
👹 மாமியாரை முடிச்சுவிட்ட 'மருமகன்'... மாட்டுனது எப்படி? சினிமாவை மிஞ்சும் நிஜக் கொடூரம்! 😱🚨
— மரங்கொத்தி Woody (@marankothi) May 2, 2026
காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டியோட அம்மாவையே இப்படி ஒருத்தன் கொல்லுவான்னு யாரும் நினைச்சுருக்க மாட்டாங்க! 💔 தெலுங்கானாவுல நடந்த இந்தச் சம்பவம் கேக்கவே பகீர்னு இருக்கு. 'வலிப்பு… pic.twitter.com/Jmiv2h28Ki
இந்தநிலையில் மறுநாள் மதியம், அருணா கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஸ்நேஹித் தனது பைக்கில் அவரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்றான். சிறிது நேரத்திற்குப் பிறகு காவ்யாவிற்கு போன் செய்து உன் அம்மாவிற்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்துவிட்டதாகவும், அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்ததாகவும் கூறினார். இதனால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற காவ்யா சினேகித்தின் நடத்தையில் மாற்றத்தைக் கவனித்தார். மேலும் தனது அம்மா தலையில் அடிப்பட்டு இருப்பதால் சந்தேகமடைந்தார். இதனை உறுதி செய்ய செங்கிசெர்லா ஆர்.டி.சி காலனியில் உள்ள அனுமன் கோவில் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்தார். அதில் பைக்கில் அழைத்து சென்ற சினேகித் அருணாவுடன் வாக்குவாதம் செய்து, தனது ஹெல்மெட்டால் அவரை பலமாகத் தாக்கியதில், அவர் ஓடிக்கொண்டிருந்த பைக்கிலிருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணா, அன்றே உயிரிழந்தார். காவ்யாவின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய மேடிபள்ளி போலீசார், சினேகித் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

