வீட்டுக்குள் புகுந்து இளைஞரை கழுத்தறுத்து கொன்ற பெண்! கடலூரில் பரபரப்பு
வீட்டில் இருந்த வாலிபர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடலூர் பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்திநகர் சேரன்செங்குட்டுவன் சாலையில் பிரசாத் (37) என்பவர் தனது தாய் ராமதிலகம் (70) என்பவருடன் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் இன்று மாலை வீட்டில் இருந்த பிரசாத் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் நடத்திய விசாரணையில், அவரை 2 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. இதற்கிடையில் மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் பக்கத்து வீட்டை சுற்றி வந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை சேகரித்தனர்.
அதையடுத்து இறந்த பிரசாத் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


