சாக்கு மூட்டையில் பெண் சடலம்- கணவர் கைது

 
ச்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோபி ராசிபுரத்தில் சாக்கு மூட்டையில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கணவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து - அன்னூர் செல்லும் சாலையில் ராசிபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை. தற்போது இந்த தொழிற்சாலை செயல்படாமல் உள்ளதால், அதை திருமண மண்டபமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அதன் வளாகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.  கிணற்றிலிருந்து வீசிய துர்நாற்றத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல் துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிற்குள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாக்கு மூட்டை ஒன்றில் பெண்ணின் சடலம் இருப்பதை உறுதி செய்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரைப் பல நாட்களுக்கு முன்பே கொலை செய்துவிட்டு, ஆதாரங்களை மறைக்கச் சாக்கு மூட்டையில் கட்டித் தொழிற்சாலைக் கிணற்றில் வீசியது யார்? என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோபி ராசிபுரத்தில் சாக்கு மூட்டையில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி, கிணற்றில் வீசியதாக கட்டட தொழிலாளி சோட்டாலால் என்பவரை போலீசார் 4 நாட்களுக்குப் பின் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.