கணவர்,மாமியார், நாத்தனாரால் பெண் அடித்துக்கொலை! வரதட்சணையால் நடந்த கொடூரம்

 
s


 திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்நரேஷ்.  ஆசிரியர்கள் வேலை செய்து வருவதாக பொய் சொல்லி விழுப்புரம் மாவட்டம் பெரிய வலசை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்து .

கடந்து 2017 ஆம் ஆண்டு இந்த திருமணம் நடந்திருக்கிறது . 16 சவரன் தங்க நகை சீர்வரிசை பொருட்களுடன் கணவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் ஜெயபாரதி. ஆசிரியர் வேலை என்று பொய் சொல்லி திருமணம் செய்த நரேஷ் திருமணத்திற்கு பின்னர் எந்த வேலைக்கும் செல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிபோதையில் சுற்றி வந்திருக்கிறார்.  இதில் ஜெயபாரதியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்திருக்கிறார் .  அவர்கள்  கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரும் கேட்ட வரதட்சணை ஜெயபாரதியால் வாங்கி கொடுக்க முடியவில்லை.

m

 இதனால் ஆத்திரமடைந்த கணவரும் மாமியாரும் நாத்தனரும் சேர்ந்து ஜெயபாரதியை கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.  இதில் பரிதாபமாக ஜெயபாரதி உயிரிழந்திருக்கிறார் .  அதன் பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியது மாதிரி செய்துவிட்டு நாடகமாடி இருக்கிறார்கள்  போலீசார்  விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்தது.

 இதை அடுத்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஜெயபாரதியின் தங்கை, தாய், தம்பி மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் இருந்த ஜெயபாரதியின் உடலை பார்த்து அழுது இருக்கிறார்கள்.  அப்போது ,தாடை, முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தாடை வீங்கி . இதில் சந்தேகம் அடைந்து அவர்கள் வெட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க,  போலீசார் இதை  கொலை வழக்காக பதிவு செய்து அதன் பின்னரும் போலீசார் அதை கொலை வழக்கமாக பதிவு செய்யாமல் விசாரணை நடத்தி வருகின்றனர்.