தங்கச்சியை கர்ப்பமாக்க கணவனுக்கு உடந்தையாக இருந்த மனைவி!

வேடசந்தூர் அருகே மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வடமாநில இளைஞர் மற்றும் மனைவி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவிகிரி(வயது 27). இவர் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும் அந்த நூற்பாலையில் வேலை பார்த்த சிவரஞ்சனி(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இருவரும் பானி பூரி கடை வைத்து நடத்தி வந்தனர். சிவரஞ்சனியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது 15 வயது தங்கையும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் வடமதுரை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வடமதுரை மகளிர் போலீசார் ரவிகிரியை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததும், அதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி உடனடியாக இருந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் ரவிகிரி சிவரஞ்சனி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.