கள்ளக்காதலை கண்டித்த கணவனை கூலிப்படையை ஏவிக் கொன்ற மனைவி

 
murder

கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுக்கும் ஆர்த்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த ஸ்ரீகாந்த் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய ஆர்த்தி திட்டமிட்டார். 

இளையராஜா உதவியுடன் கூலிப்படையினரை ஏவி 2021 நவம்பரில் ஸ்ரீகாந்த்தை அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவாடானை டிஎஸ்பி நிரேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆர்த்தி அவரது கள்ளக்காதலன் இளையராஜாஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். கொலை சம்மந்தமாக கூலிப்படையைச் சேர்ந்த சமயத்துரை ஆசைமுத்துவை தீவிரமாக தேடி வந்தனர்.

murder

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கூலிப்படையை சேர்ந்த சமயதுரையை திருவாடானை போலீசார் கைது செய்து திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.