கணவனை கொன்று உடலை கிரைண்டரில் அரைத்த மனைவி
காதலனோடு முறையற்ற உறவில் இருந்ததை பார்த்து விட்டதால், ஆண் நண்பர்களோடு சேர்ந்து கணவனை கொன்று அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக கிரைண்டரில் போட்டு அரைத்த உபியை சேர்ந்த ரூபி என்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 15 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் சந்தௌசி கோட்வாலி பகுதியில் உள்ள பத்ராவா சாலையில் உள்ள வடிகால் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு பை கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவரின் பாதி தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. தலை மற்றும் கால்கள் காணவில்லை.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கணவர் ராகுல் காணாமல் போனார். உடனே அவரது மனைவி ரூபியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரூபியிடம் பெற்ற வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார், ரூபியின் செல்போனை சோதனை செய்து பார்த்தபோது, அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. உடனே ராகுல் காணாமல்போன சம்பவத்துக்கும் இந்த கள்ளக்காதலுக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தனர். அப்போது நவம்பர் 18-19 அன்று, ராகுல் தனது மனைவி ரூபியை தனது காதலன் கௌரவுடன் வீட்டிற்குள் பார்த்துள்ளார். இதனால் ராகுலுக்கும், ரூபிக்கும் சண்டை ஏற்பட்டு, ரூபியை கடுமையாக அடித்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ராகுலை கொலை செய்ய திட்டமிட்ட ரூபி, தனது காதலனுடன் சேர்ந்து ராகுலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது கணவரின் உடனை துண்டு துண்டாக வெட்டினர். பின்னர் பாதி உடலை ஒரு பையில் அடைத்து சந்தௌசியின் பட்ராவாவில் வீசினர். தலை மற்றும் கால் பாகங்கள் வேறொரு பகுதியில் வீசப்பட்டன. மீதி பாதியை கிரைண்டரில் அரைத்து அடையாளம் தெரியாமல் ஆக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் இறந்தவரின் மனைவி மற்றும் அவரது காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உடலை துண்டிக்க ரூபி பயன்படுத்திய கிரைண்டர், சுத்தியல், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் இரும்பு கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


