காதல் கணவனை கொலை செய்த மனைவி- 10 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுப்பு
மாங்காடு அருகே காதல் கணவனை மனைவியே கொலை செய்துவிட்டதாக மனைவி மீது உறவினர்கள் புகார் அளித்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு இறந்து அடக்கம் செய்யப்பட்ட உடலை காவல்துறையினர் தேண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
போரூர் அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்ராஜ்(36), இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சஷ்டிராம் என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி காலையில் வீட்டின் படுக்கை அறையில் ராம்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி அவரது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உறவினர்கள் பார்த்தபோது படுக்கையறையில் ராம்ராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ராம்ராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்து கொளப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர். இந்த நிலையில் தனது தம்பியான ராம்ராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணான் ராஜூவ் காந்தி மாங்காடு போலீசில் அளித்த புகார் அளித்துள்ளார்.அதில் தனது தம்பியின் கழுத்தில் ரத்த காயம் இருந்ததாகவும் இதைப்பற்றி எனது தம்பியின் மனைவியிடம் கேட்ட போது முறையாக பதில் கூறவில்லை. அதேபோல் எனது தம்பிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளது என்வே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதையடுத்து உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்த காவல்துறை வருவாய்த்துறை முன்னிலையில் மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கொளப்பாக்கம் சுடுகாடில் ராம்ராஜினி உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.