கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி! 2 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?

 
கொலை

ஆவடி அருகே ராணுவ வீரரின் மனைவி, கணவனை புடவையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கணவர் குடிபோதையில் இறந்து விட்டாதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது.

Latest Tamil News

ஆவடி அடுத்த பட்டாபிராம் முத்தா புதுப்பேட்டை ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தவர் வேளாங்கண்ணி தாஸ். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் அதிக அளவில் குடித்துவிட்டு வீட்டில் சண்டை இடுவது வழக்கமாக இருந்தது. கடந்த 10-ஆம்தேதி இரவு மதுபோதையில் வீட்டில் மனைவியிடம் சண்டை போட்ட பொழுது இருவருக்கும் வாக்கு வாதம் அதிகரித்த நிலையில் மனைவி நீமா ரோஸ் மேரி சேலையால் கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கணவன் அதிகம் மது போதையில் சுயநினைவு இழந்து இருப்பதாக தெரிவித்து ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

ராணுவ மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் வேளாங்கண்ணி தாஸ் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற முத்தா புதுப்பேட்டை காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் கழுத்தை நெரித்து உயிரிழந்தது தெரியவந்த நிலையில், வழக்கு பதிவு செய்து இராணுவ வீரரின் மனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Army soldier killed.. Dramatic wife.. Arrested after two months tvk

கணவன் அதிக மது போதையில் தினமும் குடித்துவிட்டு சண்டையிடுவதால் அவர் தொல்லை தாங்க முடியாமல் புடவையினால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக லீமா ரோஸ் மேரி போலீசாரிடம் தெரிவித்தார். பின்பு அவர் மீது முத்தா புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆதரவு படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஒரு ராணுவ வீரர் கணவரை மனைவி புடவையினால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு‌ நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.