செல்போனை விற்றுவிட்டுவந்த கணவனை அடித்துக் கொன்ற மனைவி

 
murder

தேனி மாவட்டம் போடியில் கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

murder

தேனி மாவட்டம் போடியில் ஜே.கே.பட்டி பாரதிநாராயணசாமி தெருப்பகுதியில் வசித்து வந்த தம்பதிகள்  மோகன் (42), இவரது மனைவி கார்த்திகா (35). ஏலக்ட்ரீசீயன் பணிபுரிந்து வந்த மோகன், கடந்த 12ஆம் தேதியன்று குடிபோதையில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக மோகனின் தாயார் வண்ணக்கிளி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர்.

மருத்துவ பரிசோதணை அறிக்கையில் பலமாக நெஞ்சில் தாக்கப்பட்டு நெஞ்செலும்பு முறிந்து இறப்பு ஏற்பட்டதாக தெரிய வந்த நிலையில், காவல்துறையினரின் விசாரணை இறுக்குவதை அறிந்து மோகன் மனைவி கார்த்திகா, போடி நகர்கிராமநிர்வாக அலுவலர் ராஜாமணி முன்பு ஆஜராகி பகீர் வாக்குமூலம் அளித்தார் அதில், தனது கணவர் மோகன் குடிபோதைக்கு அடிமையானவர் என்றும் சம்பவநாளில் வீட்டில் இருந்த ஆண்ராய்டு போனை விற்றுவிட்டு போதையில் வீட்டிற்கு வந்ததாகவும் இதனால் கணவன் மனைவி இருவரும் -இடையே தகறாறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த கார்த்திகா கம்பாலும், காலாலும் தாக்கியதில் கணவன் உயிரிழந்ததாகவும் கூறினார். வாக்கு மூலத்தின் அடிப்படையில் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய போடி நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், கார்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.