நண்பனு நம்பி வீட்டுக்குள்ள விட்ட என் மனைவி கூடவே குடும்பம் நடத்துறீயா? கொலையில் முடிந்த நட்பு

 
murder

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

murder

தொண்டி அருகே உள்ள நம்புதாலை மேல தெருவில் வசித்து வருபவர் மிர்சன் அலி ஜின்னா (38). அதே பகுதியில் வசித்து வருபவர் முகமது அபூபக்கர் (26). இவர் தொண்டியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நண்பராக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் மிர்சன் அலி ஜின்னாவின் மனைவிக்கும் முகமது அபூபக்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மிர்ஷன் அலி ஜின்னா இருவரையும் கண்டித்துள்ளார்

இந்நிலையில் நேற்று இரவு முகமது அபூபக்கர்மிர்சன் அலி ஜின்னா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு முகமது அபூபக்கர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். அப்போது  போதையில் இருந்த மிர்சன் அலி ஜின்னா வீட்டில் இருந்த ஆட்டுக்கல், குளவி கல்லை எடுத்து முகமது அபூபக்கரின் தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். தாய் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய மிர்சன் அலி ஜின்னாவின் மனைவி காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முகமது அபூபக்கர் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

murder

இது குறித்த தகவலின் பேரில் திருவாடானை டிஎஸ்பி நிரேஷ்மற்றும் தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகமது அபூபக்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் பைரவி வரவழைக்கப்பட்டு ஓட விடப்பட்டது. கொலை நடந்த வீட்டிலிருந்து ஈசிஆர் சாலை வரை சென்று நாய் நின்றுவிட்டது. அதை தொடர்ந்து தலைமறைவான மிஷன் அலி ஜின்னாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்